வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர் சிட்டி: ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு வரும் டிச.05ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்(74), உடல் நலக்குறைவு காரணமாக ஜாமினில் வெளியே வந்துள்ளார். நீதிமன்றம் அனுமதியுடன் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
![]()
|
இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சார்யா, தந்தைக்காக தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்துள்ளார். வரும் டிச.05-ம் தேதியன்று லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக லாலு மகன் தேஜாஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.