புதுடில்லி:மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 'சென்செக்ஸ்', முதல் முறையாக, 63 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், அதன் வரலாற்றில், முதன் முறையாக 63 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உயர்ந்துள்ளது.
கடந்த ஆறு வர்த்தக நாட்களாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில், ஏழாவது நாளாக நேற்றும் ஏற்றத்தை கண்டுள்ளன.
உலக சந்தையின் சாதகமான போக்கினாலும், அன்னிய முதலீடு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், நேற்று பங்குச் சந்தைகள் புதிய உச்சம் தொட்டன.
சென்செக்ஸ் குறியீட்டு எண்ணைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி'யும் புதிய உச்சத்தை எட்டிஉள்ளது.
செப்டம்பர் காலாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தரவுகள் நேற்று வெளியாக இருந்த நிலையிலும், சந்தை அது குறித்து கருத்தில் எடுத்துக்கொள்ளாமல், உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தை தரவுகளின்படி, கடந்த செவ்வாய் கிழமை அன்று மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 1,242 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளனர்.