புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, வேகம் குறைந்து, 6.3 சதவீதமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின் படி, கடந்த நிதியாண்டில், இதே இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.
மேலும், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், வளர்ச்சி 13.5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது.
பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி 5.8 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்துக்குள் இருக்கும் என தெரிவித்துஇருந்தனர்.
எஸ்.பி.ஐ., வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என குறைவாக கணித்திருந்தது.
ஆனால், ரிசர்வ் வங்கி, மதிப்பீட்டு காலத்தில், வளர்ச்சி 6.1 _ 6.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி 6.3 சதவீதமாக உள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.