கடம்பூர் அருகே மக்காச்சோள காட்டில் கஞ்சா பயிரிட்டவர் கைது செய்யப்பட்டார்.கடம்பூர் அருகே உள்ள கூட்டார்தொட்டி பகுதியில் மக்காச்சோள காட்டில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சென்று விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி,35,
என்பவர் தனது வீட்டிற்கு பின்னால் உள்ள 5ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளகாட்டிற்குள் ஊடுபயிராக 40 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.பின்பு அவரை கைது செய்து 40 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்யப்பட்டது.