கூடலூர்: கூடலூர், தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் பணம் பெற்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி 7வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சத்தியசீலனிடம், 'ஒருவர் பணம் கொடுக்க வருவதும், அவரிடம், 'பணத்தை கவரில் போட்டு தரும்படி கூறி, கவரில் பணம்பெறும்' வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பரபரப்யை ஏற்படுத்தி உள்ள, இந்த வீடியோ ஆளும் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![]()
|
சத்தியசீலன் கூறுகையில், 'ஐந்து மாததுக்கு முன், சேர்மேன், என்னை அழைத்து, ஒருவரை அனுப்பி வைப்பதாகவும்; அவர் ஒரு தொகை தருவார். அதனை பெற்று, கொடுக்கும் படி கூறி, அவரை அனுப்பி வைத்தார். அவருடன் வந்தவர் கொடுத்த பணத்தை பெற்று, அதனை சேர்மேனிடம் கொடுத்து விட்டேன். எனக்கு சிறிய தொகை (ரூ.5000) கொடுத்தார். எதற்கு, பணம் வாங்கினார் என்பது, எனக்கு தெரியாது' என்றார்.
![]()
|
கூடலூர் நகராட்சி தலைவர் (தி.மு.க.,) பரிமளா கூறுகையில், 'எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடம் நான் பேசவில்லை. அவர், என்னை மாட்டி விட்டு தப்பிக்க பார்கிறார்' என்றார்.