ஆன்லைன் ரிவ்யூக்கு செக்; மீறினால் ஃபைன் கட்டணும்!| Dinamalar

ஆன்லைன் ரிவ்யூக்கு செக்; மீறினால் ஃபைன் கட்டணும்!

Updated : டிச 01, 2022 | Added : நவ 30, 2022 | |
இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் மற்றும் ரேட்டிங்களை தடுக்க நுகர்வோர் விவகாரத்துறை (Ministry of Consumer Affairs) புதிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது.இந்தியாவில் இ-காமர்ஸ் பிளாட்ஃபாரம்கள் (E-Commerce Platforms) மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. மக்கள் இருந்த இடத்திலேயே மளிகை பொருட்கள், உணவு, ஹோம்-அப்லையன்ஸ், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்கள் என ஏராளமான
Dinamalar, Technology, FakeOnlineReview, தினமலர், டெக்னாலஜி, போலிஆன்லைன் ரிவ்யூ

இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் மற்றும் ரேட்டிங்களை தடுக்க நுகர்வோர் விவகாரத்துறை (Ministry of Consumer Affairs) புதிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது.

இந்தியாவில் இ-காமர்ஸ் பிளாட்ஃபாரம்கள் (E-Commerce Platforms) மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. மக்கள் இருந்த இடத்திலேயே மளிகை பொருட்கள், உணவு, ஹோம்-அப்லையன்ஸ், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்கள் என ஏராளமான பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிகொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தற்போதைய காலங்களில் பொருட்களை வாங்கும் பெரும்பாலானவர்கள் நேரடியாக அந்தந்த கடைகளுக்கு சென்று அந்த பொருளின் தரத்தை சோதித்து பார்க்காமல், இ-காமர்ஸ் பிளாட்ஃபாரம்களில் ஆர்டர் செய்யும் முன் அந்த பொருட்களின் தரம் எப்படி இருக்கிறது என்று முன்பு அதை வாங்கிய வாடிக்கையாளர்களின் ரிவ்யூ மற்றும் ஸ்டார் ரேட்டிங்கை வைத்து வாங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்கிறார்கள்.latest tamil news


இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோன்ற இ-காமர்ஸ் பிளாட்ஃபாரம்களில் அந்த பொருட்களின் தரம் குறித்து யார் வேண்டுமானாலும் ரிவ்யூஸ் & ரேட்டிங் அளிக்கலாம். சில நேரங்களில் பணம் வாங்கி கொண்டு செய்யப்படும் போலி ரிவ்யூக்கள் குறிப்பிட்ட தயாரிப்பு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்துகின்றன. இதனை நம்பி சிலர் பொருட்களை வாங்கிய பின்பு போலியான மற்றும் மோசமான நிலையில் பொருட்களை பெற்று ஏமாற்றம் அடைகின்றனர்.latest tamil news


இந்நிலையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களில் பதிவிடப்படும் போலி ரிவ்யூஸ்களை தடுக்கும் வகையில், ஆன்லைன் கன்ஸ்யூமர் ரிவ்யூஸ் தொடர்பாக அரசின் வழிகாட்டுதல்கள் கடந்த வாரம் நவம்பர் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிகள் டூர் & ட்ராவல் சர்விஸ், ரெஸ்டாரன்ட்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வெப்சைட்ஸ்களுக்கும் பொருந்தும்.


புதிய விதிமுறைகள் என்னென்ன?


புதிய விதிகளின் கீழ் சொமேட்டோ, சுவிக்கி, டாடா சன்ஸ், ரிலையன்ஸ் ரீட்டெயில், மெட்டா, அமேசான், மற்றும் ஃப்ளிப்கார்ட் (Zomato, Swiggy, Tata Sons, Reliance Retail, Meta, Amazon, Flipkart) போன்ற பல நிறுவனங்கள் வருகின்றன.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் ஆன்லைன் ரிவ்யூஸ் மற்றும் ஸ்டார் ரேட்டிங்ஸ் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) மூலம் கோடிட்டு காட்டப்பட்டுள்ள போலி ரேட்டிங்க்ஸை சரி பார்ப்பதற்கான வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்துள்ளன.

BIS-ன் புதிய தரநிலையான IS 19000:2022, இ-மெயில் அட்ரஸ் மூலம் ரிவ்யூ கொடுப்பவரை சரிபார்த்தல், கால் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அடையாளம் காணுதல், லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரேஷனை உறுதிப்படுத்துதல், கேப்ட்சா சிஸ்டமை ரிவ்யூ செய்பவரின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் முறைகளையும் வழங்குகிறது.

தயாரிப்புகளை ரிவ்யூ செய்ய விரும்பும் யூஸர்கள் முதலில் தொடர்பு தகவலை வழங்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.

பிளாட்ஃபார்ம்களில் வெளியிடப்படும் ரிவ்யூக்கள் மற்றும் ரேட்டிங்கள் பதிவிட்ட தேதியை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

புதிய விதிகளின்படி, யூஸர்கள் தங்கள் ரிவ்யூஸ்களை போஸ்ட் செய்தவுடன் அவற்றை திருத்த முடியாது.

ரிவ்யூஸ்களை போஸ்ட் செய்ய விரும்பும் யூஸர்கள் விதிமுறைகளின்படி அவர்களின் கான்டாக்ட் விவரங்களை வழங்க வேண்டும்.

ஏதேனும் வெப்சைட்ஸ் போலி ரிவ்யூக்களை வழங்கியிருப்பது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.latest tamil news


அரசின் இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பரவலான போலி ரிவ்யூஸ்கள் அகற்றப்பட்டு, வணிகம்/தயாரிப்பின் உன்மையான தரம் தெரியவருவதுமட்டுமல்லாமல் சிறந்த தரமான பொருட்களும் சந்தைக்கு வரக்கூடும். இந்த புதிய விதிமுறைகள் யூஸர்களுக்கு சிறந்த விற்பனை அனுபவத்தை வழங்கவும் வணிகங்களின் நற்பெயரை பராமரிக்கவும் உதவுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X