அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெட்டியபட்டி அருகே திருமலைபுரத்தில் தாய் ஆடு 3 குட்டிகள் போட்டு இறந்து விட்டதால், குட்டிகளுக்கு வளர்ப்பு நாய் பால் கொடுக்கிறது.
அருப்புக்கோட்டை ரெட்டியபட்டி அருகே திருமலைபுரத்தை சேர்ந்த விவசாயி ராமர் ஆடு, மாடு, நாய்கள் வளர்த்து வருகிறார். இவரிடமுள்ள ஆடு கடந்த வாரம் 3 குட்டிகள் போட்டு இறந்து விட்டது. பாலுக்கு பரிதவித்த குட்டிகளுக்கு ராமன் வளர்த்து வரும் நாய் பால் கொடுக்கிறது. தாய்மைக்கு பேதமில்லை என்பதை உணர்த்தும் விதமாக நாயின் செயல் உள்ளது.