சென்னை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை திருத்த, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொது தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க, நேற்று வரை, தலைமை ஆசிரியர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
இன்னும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக, சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.
இதன்படி, மாணவர்களின் பெயர் விபரங்களை சரிபார்த்து, திருத்தங்கள் செய்யும் பணி மேற்கொள்ள, டிச., 12 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே கடைசி வாய்ப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.