பாலக்காடு,பாலக்காட்டில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 62 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பட்டாம்பியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம், 30.
'மதரசா' எனப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத்தரும் பள்ளியில் பணிபுரியும் இவர், 2019ல் 6 வயது சிறுமியை மதரசாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பெற்றோர் அளித்த புகாரின்படி, போலீசார் இவ்வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.வழக்கு பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று குற்றவாளிக்கு, 62 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி சதீஷ்குமார் நேற்று உத்தரவிட்டார்.