புதுடில்லி :கடந்த 2021 - 2022 நிதியாண்டில் பா.ஜ.,வுக்கு 614 கோடி ரூபாயும், காங்கிரசுக்கு 95 கோடி ரூபாயும் தேர்தல் நன்கொடையாக கிடைத்துள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசியல் கட்சிகள் கடந்த 2021 - 2022ம் நிதியாண்டில் பெற்றுள்ள நன்கொடை கணக்குகளை, கடந்த அக்டோபரில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.
![]()
|
இதன்படி, தேசியக் கட்சிகளான பா.ஜ., 614.53 கோடி ரூபாய், காங்கிரஸ் 95.46 கோடி ரூபாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10.05 கோடி ரூபாய், திரிணமுல் காங்கிரஸ் 43 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக பெற்றுள்ளன.இதேபோல், மாநிலக் கட்சியான ஆம் ஆத்மி, கடந்த நிதியாண்டில் 44.54 கோடி ரூபாய் தேர்தல் நிதி வசூலித்துள்ளது. இதே ஆண்டில் 30.30 கோடி ரூபாய் செலவுக் கணக்கும் காட்டிஉள்ளது. காங்கிரசை விட, பா.ஜ.,வுக்கு ஆறுமடங்கு அதிகமாக நன்கொடை கிடைத்துள்ளது.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.