குடியாத்தம்:வேலுார் மாவட்டத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்ட, 1,200 பேனர்கள் அகற்றப்பட்டன.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பி.கே.,புரம் கிராமத்தில் கடந்த, 27ல் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற கட்சி விழா நடந்தது.
அவரை வரவேற்கும் விதமாக, வழியில் உள்ள வடுகந்தாங்கல் கிராமம் மெயின் சாலையில், அன்று மாலை 4:30 மணிக்கு, முன்னாள் வடுகந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் மார்கபந்து, 55, தலைமையில், தி.மு.க.,வினர் பேனர் வைத்து கொண்டிருந்தனர்.
அதில், ஒரு பேனர் சரிந்து, அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி, மார்கபந்து பலியானார்.
இதையடுத்து, வேலுார் எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி, மாவட்டம் முழுதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, 1,200 பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன.