உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது அரும்புலியூர் கிராமம். இப்பகுதியில், திடீர் நகர் அருகே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, பயன்பாட்டிற்கு லாயகற்ற நிலையில் இருந்தது.
அக்கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்பதால், அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி, பழுதாகி இருந்த அங்கன்வாடி கட்டடம் கடந்த மாதம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அரும்புலியூரில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 11.10 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது, அதற்கான பணி துவங்கி தீவிரமாக நடைபெறுகிறது.