உத்திரமேரூர்:பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கலைத்திருவிழா போட்டிகள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் வட்டாரத்தில், உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நேற்று துவங்கின. உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா, உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்களிடம் மரபு கலைகள் மறந்து போகாமல் இருக்க, அடுத்த தலைமுறைக்கும் நாட்டுப்புற கலைகள், இசை, நடனம் போன்றவற்றின் மீது ஆர்வத்தை துாண்டும் நோக்கத்தில், இத்தகைய கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுவதாக, எம்.எல்.ஏ., சுந்தர் பேசினார்.