கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி அடுத்துள்ள ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி, மதுரை மீனாட்சிபுரத்தில் வசித்து வருபவர் குமார், 49.
இவர், தனது வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த எட்டு சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், அதில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.