11 குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மனு

Updated : டிச 01, 2022 | Added : டிச 01, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட மதக் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற 21 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானர். 9 பேர் படுகொலைஅவரது 3 வயது பெண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச்
2002 Gujarat riots,Bilkis Bano, Supreme Court, Rapists, குற்றவாளிகள் , உச்ச நீதிமன்றம், பில்கிஸ் பானு, மனு

புதுடில்லி: பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட மதக் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற 21 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானர்.


9 பேர் படுகொலைஅவரது 3 வயது பெண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர்களை, 1992 நன்னடத்தை விதிகளின்படி கடந்த ஆக., 15ல் குஜராத் அரசு விடுவித்தது. காலாவதியான விதியின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் ஒப்புதலை குஜராத் அரசு கோரியது.

இரண்டே நாட்களில் அந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, 11 பேரும் நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டது செல்லும் என உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


latest tamil news


அதிகாரம் இல்லைஅதில், 'இந்த வழக்கு விசாரணை மஹாராஷ்டிராவில் நடந்தது. எனவே, குற்றவாளிகளை நன்னடத்தையின் கீழ் விடுவிக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்கு இல்லை' என, கூறப்பட்டுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்கும் நிலையில், பில்கிஸ் பானு தாக்கல் செய்துள்ள மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (7)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
01-டிச-202213:27:33 IST Report Abuse
Sridhar உச்ச நீதிமன்றம் விதிமுறைகளின் கீழ் மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உறுதி செய்த பிறகுதானே விடுதலை செய்திருக்கிறார்கள். சட்டப்படி இதில் தவறு ஒன்றும் இல்லை. நியாயப்படி பார்த்தால், ராஜிவ் கொலைக்குற்றவாளிகள் விடுதலை ஆனபோது சால்வை போட்டு வரவேற்றோமே நாடெல்லாம் வெடிவைத்து புளகாங்கிதம்டைந்தோமே, கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை ஆன்ணாத்துறை பிறந்ததினம் என்று சொல்லி விடுதலை செய்தோமே, அவை சரி என்றால், இதுவும் சரிதான் தங்கள் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள இந்த மனுவை உச்ச கோர்ட் எப்படி விசாரிக்கப்போகிறது என்று பார்க்க ஆவலாக இருக்கிறது.
Rate this:
Cancel
01-டிச-202212:31:12 IST Report Abuse
ஆரூர் ரங் கோத்ரா ரயிலில் 64 அப்பாவி ஹிந்து சாதுக்களும் குழந்தைகளும் எரிக்கப்பட்ட போது எந்த மூர்க்க இயக்கமும் கண்டிக்கவில்லை😶. அதற்கு எதிர்வினைகள் நடக்கும் என்று தெரியாதா? மதுரை லீலாவதி கொலை குற்றவாளிகளை 8 ஆண்டுகளில் விடுதலை செய்த போதும் இவர்கள் எதிர்க்கவில்லை. லீலாவதியும் பில்கிஸ் போல ஒரு பெண்தானே?
Rate this:
Cancel
MPRMTNJ - CHENNAI,இந்தியா
01-டிச-202211:07:54 IST Report Abuse
MPRMTNJ மற்ற வழக்குகள் என்றால் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் இழுத்தடிக்கும் மத்திய அரசு பல்கீஸ் பானு வழக்கில் இரண்டே நாளில் குற்றவாளிகள் விடுதலை செல்லும் என்று அறிக்கை அனுப்பிய போதே தெரியலையா? எந்த அளவு வன்மம் கொண்டு மத்திய அரசு இருக்கிறது என்று?
Rate this:
Anand - chennai,இந்தியா
01-டிச-202212:27:22 IST Report Abuse
Anandராஜிவ் கொலையாளிகளை விடுவித்தபோது மட்டும் இனித்தது........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X