சென்னை: 'காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது' என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியிருப்பது தி.மு.க., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும் 2021 சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளிலும் வென்றது.
வரும் 2024 லோக்சபா தேர்தலில் கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க தி.மு.க., ஆலோசித்து வருகிறது.
இதனால் ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களே கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று 'யு டியூப்' சேனலுக்கு பேட்டியளித்த அழகிரி 'கூட்டணியின்றி எந்த கட்சியும் வெல்ல முடியாது. காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது.
![]()
|
இது தி.மு.க., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஸ்டாலின் சிறந்த முதல்வர்' என கூறியபடியே, 'காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது' என கூட்டணிக்குள் அழகிரி கல்லெறிந்துள்ளதாக, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.