மாணவியரை ஓட ஓட விரட்டி 'வெளுத்த' ஆசிரியை மீது வழக்கு

Added : டிச 01, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
ஹைதராபாத் தெலுங்கானாவில், மாணவியரை ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளிய ஆசிரியை மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தின் மட்னுார் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவி, மொபைல் போனில் ஆசிரியையை படம் எடுத்தார். பின் அந்தப் படத்தை சமூக வலைதளத்தில், 'போரிங் கிளாஸ்' என தலைப்பிட்டு வெளியிட்டார். இந்த தகவல்,
telangana,school student, assault, video, teacher, beaten, girl

ஹைதராபாத் தெலுங்கானாவில், மாணவியரை ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளிய ஆசிரியை மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தின் மட்னுார் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவி, மொபைல் போனில் ஆசிரியையை படம் எடுத்தார். பின் அந்தப் படத்தை சமூக வலைதளத்தில், 'போரிங் கிளாஸ்' என தலைப்பிட்டு வெளியிட்டார். இந்த தகவல், ஆசிரியைக்கு நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அந்த மாணவியுடன் அவருடைய வகுப்புத் தோழிகள் சிலரையும், ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளினார்.


latest tamil news

இந்தச் சம்பவத்தை மற்றொரு மாணவி மொபைல் போனில் 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதைப் பார்த்த ஏராளமானோர் ஆசிரியைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவியை அழைத்து விசாரித்த போலீசார், ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆசிரியையின் இந்தக் கொடூர செயலைக் கண்டித்து, சில மாணவியர் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (23)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
06-டிச-202216:58:29 IST Report Abuse
Krishnamurthy Venkatesan காவல் துறை மற்றவர்களின் அழுத்தம் காரணமாக ஆசிரியர் மீது வழக்கு பதிந்திருப்பது கண்டிக்க தக்கது. அந்த பெண் செய்தது தவறா இல்லையா? குச்சியை தூக்கி கொண்டி ஆசிரியர் அவர்கள் பின்னால் ஓடியிருப்பாரே தவிர கொடூரமாக அடித்திருக்க மாட்டார். அந்த ஆசிரியரின் ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பார் அல்லவா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-டிச-202214:33:09 IST Report Abuse
r.sundaram இந்த மாணவிகள் செய்தது தப்பே இல்லையா? அடுத்தவரை அவரது சம்மதம் இல்லாமல் எப்படி படம் எடுக்கலாம்? படம் எடுத்து விட்டு அதை எப்படி வெளியிடலாம்? ஆசிரியர் மேல் வழக்கு தொடுப்பதற்கு முன் இதை ஆலோசிக்க வேண்டாமா? இந்த ஆசிரியை பிரம்படி கொடுக்காமல், போலீசுக்கு போயிருந்தால் நிலைமை என்ன? அந்த ஆசிரியர் தனது வேலையை சரிவர செய்ய விடாமல் தடுத்ததாக புகார் கொடுத்தால்?
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
01-டிச-202213:58:47 IST Report Abuse
S.Baliah Seer ஒரு ஆசிரியை பாடம் நடத்துவதை மொபைல் போனில் படம் எடுத்த மாணவிகளைக் கண்டிக்காமல் ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாலியல் குற்றங்கள் அதிகரிப்புக்கு மாணவிகளே மூல காரணம் என்பதை இப்போதாவது பெற்றோர்கள் புரிந்து கொண்டு போதிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் ஆசிரியர் சமுதாயமும் போராடும் நிலை வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X