சென்னை: மின் வாரியத்திடம் நேற்று(நவ.30) வரை, 33 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இணைத்துள்ளனர்.
தமிழக மின் வாரியம், இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் வீடுகள், விசைத்தறி, குடிசை வீடு, விவசாய பிரிவுகளை சேர்ந்த 2.68 கோடி பேரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மின் கட்டண மையங்கள், வாரிய இணையதளத்தில் ஆதார் இணைக்கலாம்.
நேற்று வரை, 33 லட்சம் பேர் தங்களின் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதில் நேற்று காலை முதல் மாலை வரை மட்டும், ஏழு லட்சம் பேர் ஆதார் எண் இணைத்துள்ளனர்.