ஐ.ஆர்.சி., விதிப்படியே வேகத்தடைகள்: அமைச்சர் வேலு அறிவுறுத்தல்

Updated : டிச 01, 2022 | Added : டிச 01, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
கோவை: ''ஓட்டுனர்கள் கவனக்குறைவால்தான் தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன,'' என்று, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடந்தது.இதில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:தமிழகத்தில் இந்த ஆண்டு அக்., வரை

கோவை: ''ஓட்டுனர்கள் கவனக்குறைவால்தான் தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன,'' என்று, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
இதில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்., வரை நடந்துள்ள, 54 ஆயிரத்து, 56 விபத்துக்களில், டூ வீலர்களால், 45 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களால், 21 சதவீதமும் நிகழ்ந்துள்ளன.



latest tamil news



மாநில நெடுஞ்சாலைகளில், 35 சதவீதம், தேசிய நெடுஞ்சாலைகளில், 24, மாவட்ட சாலைகளில், 15 சதவீதமும் விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில், 14 ஆயிரத்து, 777 விபத்துகள், ஓட்டுனர் கவனக்குறைவால் நடந்தவை.
தமிழகத்தில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்களாக, 1,337 இடங்கள்(பிளாக் ஸ்பாட்) கண்டறியப்பட்டுள்ளன. விபத்துக்களுக்கு ரோடுகள் மோசமாக இருப்பது ஒரு முக்கிய காரணம்தான். மாநில நெடுஞ்சாலைத்துறையால் மட்டும் விபத்துகளை குறைக்க முடியாது; பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய முயற்சியாகும்.

ரோடுகளில் அதிவேகத்தை கட்டுப்படுத்த, போக்குவரத்து துறையினர் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை, திருவண்ணாமலை போன்ற கோவில்கள் அதிகம் உள்ள நகரங்களில், ரோடுகளில் மாடுகள் அதிகம் வலம் வருவதால் நிறைய விபத்துக்கள் நடக்கின்றன; அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.


latest tamil news



ரோடுகள் இணையும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்; அதை இந்திய சாலைக்குழும (ஐ.ஆர்.சி.,) விதிகளின்படி அமைக்க வேண்டும். முறையான அளவில் அமைக்கப்படாத வேகத்தடைகளே விபத்துக்கு காரணமாகி விடுகின்றன. சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் அதிகளவில், டூ வீலர்கள் ஓட்டுகின்றனர். இதைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேவைச்சாலைகள், நடைபாதைகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தரமான முறையில் ரோடுகளை அமைப்பதுடன், 'ரிப்ளக்டர்' போன்றவற்றை தரமான பொருளாக பயன்படுத்த வேண்டும். பாதசாரிகள் கடக்கும் பகுதிகளில், ஒளிரும் வகையிலான கோடுகளை அமைக்க வேண்டியது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் பொறுப்பாகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ், கோவை கலெக்டர் சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (10)

g.s,rajan - chennai ,இந்தியா
01-டிச-202222:29:05 IST Report Abuse
g.s,rajan இப்போது இருக்கின்ற மோசமான சாலைகளுக்கு எதுக்கு சாலை வரி கட்டணும்?? தெரியல .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
01-டிச-202221:29:22 IST Report Abuse
g.s,rajan சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள பல வேகத்தடைகளில் ஏறி இறங்குவதற்குள் வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது, பல இடங்களில் மலைமேல் ஏறி இறங்குவதைப்போல் உள்ளது பின்னாளில் முதுகுத் தண்டுவடத்தை காலி செய்து விடும். சற்று அசந்தால் உயிரையே காலி செய்து விடும் சரியான வடிவமைப்பே இல்லை. மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற வேகத் தடைகள் மிகவும் மோசம், கிராமப்புற சாலைகளிலும் அதன் வடிவமைப்பு சரி இல்லை. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்.. பூனைக்கு யார் மணி கட்டுவது? தெரியவில்லை.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
01-டிச-202218:23:48 IST Report Abuse
Kumar அப்ப எல்லா இடங்களிலும் மோசமான சாலைகளால் தான் விபத்து ஏற்படுகிறது. ஒழுங்காக ரோடு கூட போடமுடியவில்லை.அப்பறம் எதுக்கு அதுக்கு அமைச்சர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X