பிரிட்டனைச் சேர்ந்த கார்பன் ரீசைக்ளிங் இன்டர்நேஷனல் அமைப்பு, அண்மையில் சீனாவில் ஒரு ஆலையை திறந்துள்ளது. இதுதான் கரியமில வாயுவிலிருந்து மெத்தனால் தயாரிக்கும் உலகின் முதல் ஆலை.
இந்த ஆலையின் சிறப்பு என்ன தெரியுமா? பல வேதியல் உற்பத்தி ஆலைகளில் வீணாக வெளியேறும் வாயுக்களைப் பிடித்து திரவ மெத்தனாலாக மாற்றுவதுதான். அதாவது, சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் பசுமை மெத்தனால் தயாரிக்கும் ஆலை அது.
சுண்ணாம்பு ஆலையிலிருந்து வெளியேறும் கார்பன்டையாக்சைடு மற்றும் நிலக்கரி ஆலையிலிருந்து வெளியேறும் எரி வாயு ஆகியவற்றைப் பிடித்து வருகின்றனர். பின் அந்த வாயுக்களை சுத்திகரித்து, பின் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வேதியல் முறையில் திரவ மெத்தனாலாக மாற்றுகின்றனர்.
மெத்தனால் ஒரு பசுமை எரிபொருள் என்பதோடு, அதை சாயத் தொழில், கார் உதிரி பாகங்கள் என்று பல தொழில்களில் இடு பொருட்களாகவும் பயன்படுத்துகின்றனர்.