சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன். இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில் இருந்த போது திடீரென, அமச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.