மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஏனாதி செங்கோட்டை பகுதியை சேர்ந்த செந்திவேல் மகன் ராமு 25, என்பவர் நேற்று(நவ.,30) இரவு தனது வீட்டில் இருந்த பொழுது, அலைபேசி மூலம் ராமுவை ஒருவர் அருகே உள்ள இம்மனேந்தல் கண்மாய்க்கு வர சொல்லியதாக கூறப்படுகிறது. ராமுவின் அண்ணன் சரத் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ராமு வீடு திரும்பாததால் அவரது அண்ணன் கண்மாய் கரைக்கு சென்று பார்த்த போது ராமு சென்ற பைக் ரத்தக்கரையுடன் நின்றுள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்களிடம் சென்று கூறவே அனைவரும் வந்து கண்மாய் முழுவதும் தேடினர்.
ஆனால் ராமுவை கொலை செய்த கொலையாளிகள் கொடூரமான முறையில் ராமுவை கொலை செய்து தலை இல்லாமல் உடலை மட்டும் கண்மாய்க்குள் வீசி விட்டு சென்றுள்ளனர். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தயவர்கள், இது குறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மானாமதுரை போலீசார் ராமுவின் தலை யில்லாத உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது தலையையும், கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.