விவசாய நிலத்தை பதிவு: லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

Added : டிச 01, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, பாப்பா குறிச்சியில் வசித்து வருபவர் அசோக்குமார். அதே பகுதியில் உள்ள 21 சென்ட் விவசாய நிலத்தை அவர் வாங்க முடிவு செய்துள்ளார்.அந்த நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தை அவர் அணுகி உள்ளார். அரசு மதிப்பீட்டின்படி, அந்த நிலத்தை சதுர அடியில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று சார் பதிவாளர்
 விவசாயநிலம், லஞ்சம் , சார்பதிவாளர்,  கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, பாப்பா குறிச்சியில் வசித்து வருபவர் அசோக்குமார். அதே பகுதியில் உள்ள 21 சென்ட் விவசாய நிலத்தை அவர் வாங்க முடிவு செய்துள்ளார்.


அந்த நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தை அவர் அணுகி உள்ளார். அரசு மதிப்பீட்டின்படி, அந்த நிலத்தை சதுர அடியில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று சார் பதிவாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், விவசாய நிலமாக பதிவு செய்து தருவதாக கூறியுள்ளார்.


லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக் குமார், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, அசோக் குமார், ஒரு லட்சம் ரூபாயை சார் பதிவாளர் பாஸ்கரனிடம் கொடுத்த போது, டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் பாஸ்கரனை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (15)

Selvaraj - THOOKKANAIKAMPALAYAM,இந்தியா
02-டிச-202216:31:24 IST Report Abuse
Selvaraj பிச்சைக்காரன் எவ்வளவோ மேல்
Rate this:
Cancel
Selvaraj - THOOKKANAIKAMPALAYAM,இந்தியா
02-டிச-202216:29:21 IST Report Abuse
Selvaraj இதற்கு பதிலா வீதியில நின்னு பிச்சை எடுக்கிறவன் எவ்வளவோ மேல்
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
02-டிச-202205:27:04 IST Report Abuse
பிரபு அரசாங்க கட்டணம் இவ்வளவு. 'அவருக்கு' கட்டணம் இவ்வளவு என்று சொல்லித்தான் பத்திர பதிவே நடக்குது. லஞ்சம் இல்லாமல் ஒரு பதிவும் நடக்காது. பூனைக்கு யாரு மணி (Money) கட்டுவது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X