திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, பாப்பா குறிச்சியில் வசித்து வருபவர் அசோக்குமார். அதே பகுதியில் உள்ள 21 சென்ட் விவசாய நிலத்தை அவர் வாங்க முடிவு செய்துள்ளார்.
அந்த நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தை அவர் அணுகி உள்ளார். அரசு மதிப்பீட்டின்படி, அந்த நிலத்தை சதுர அடியில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று சார் பதிவாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், விவசாய நிலமாக பதிவு செய்து தருவதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக் குமார், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, அசோக் குமார், ஒரு லட்சம் ரூபாயை சார் பதிவாளர் பாஸ்கரனிடம் கொடுத்த போது, டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் பாஸ்கரனை கைது செய்தனர்.
Advertisement