வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் காங்., தலைமையில் தான் நடக்க வேண்டும்; திமுக தலைமையில் அல்ல என புதுச்சேரி மாஜி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் பேசியவதாவது: புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதன்மை யான கட்சி காங்கிரஸ்தான். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டத்தில் திமுக தலைமை வகிக்கும் என்றால் அதனை காங்கிரஸ் புறக்கணிக்க வேண்டும்.

கூட்டணி சார்பில் அண்மையில் நடந்த போராட்டம் திமுக தலைமையில் நடந்ததாக செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் காங்., தலைமையில் தான் நடக்க வேண்டும்; திமுக தலைமையில் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.