பனிக்கால அலர்ஜி: கை வைத்தியத்தில் இருக்கு 'சீக்ரெட்'

Updated : டிச 01, 2022 | Added : டிச 01, 2022 | |
Advertisement
பனிக்காலம் தொடங்கிவிட்டது. நம் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம். இந்த பனிக்காலத்தில் சிலருக்கு அலர்ஜி சாதாரண அறிகுறி போல் தோன்றி பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.வறண்ட குளிர்காலத்துடன், அலர்ஜி சீசன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆண்டு தோறும் இந்த காலத்தில் அலர்ஜியினால் காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஏற்பட்டு அதிகம் பேர்
பனிக்கால அலர்ஜி: கை வைத்தியத்தில் இருக்கு 'சீக்ரெட்'

பனிக்காலம் தொடங்கிவிட்டது. நம் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம். இந்த பனிக்காலத்தில் சிலருக்கு அலர்ஜி சாதாரண அறிகுறி போல் தோன்றி பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.

வறண்ட குளிர்காலத்துடன், அலர்ஜி சீசன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆண்டு தோறும் இந்த காலத்தில் அலர்ஜியினால் காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஏற்பட்டு அதிகம் பேர் பாதிக்கப்படுவர். தூசி, புகை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இந்த அலர்ஜி ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப இந்த தொற்று பாதிப்பு இருக்கும்.



அலர்ஜி அறிகுறிகள்


குளிர்கால அலர்ஜியின் அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, கண்ணிலிருந்து நீர் வழிவது, தும்மல், தலைவலி, தொண்டை வலி, சோர்வு ஆகியவை உண்டாகும்.


அலர்ஜி மற்றும் அவற்றின் அறிகுறிகளைத் தடுப்பதற்கான பொதுவான வழிகள் குறித்து பார்ப்போம்...



காலையில் கதவு, ஜன்னல்களை திறக்காதீர்


latest tamil news

குளிர் காலத்தில் காலை நேரங்களில் பெரும்பாலும் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடி வைப்பது நல்லது.. பனிக்காலத்தில் மகரந்த சேர்க்கையின் பரவல் அதிகம் இருப்பதால் தொற்றுகள் அதிகம் பரவும்.



வெங்காயத்தை ஒதுக்காதீங்க


latest tamil news

பச்சை வெங்காயத்தில் ஒவ்வாமையை விரட்ட கூடிய ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. உணவு எடுத்து கொள்ளும் போது சில துண்டுகள் பச்சையாக எடுத்து கொண்டால் அலர்ஜியிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.


வாசனைப் பொருட்களைத் தவிர்க்காதீங்க


latest tamil news

உடலில் சளி உறைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியம். இதற்கு தேநீரில் அடிக்கடி ஏலக்காய், லவங்கம், அதிமதுரம் ஆகியவற்றை கலந்து குடித்தால் சளி கட்டுக்குள் இருப்பதுடன் உடல் வெப்பநிலையும் சீராகும்.


ஆரோக்கியம் தரும் ஆமணக்கு எண்ணெய்


ஆமணக்கு எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் அதிகம் உள்ளதால் இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த எண்ணெயை அடிவயிற்றில் தடவி வந்தால் பாக்ட்ரியா, பூஞ்சை தொற்றுகளை தடுக்கும். அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து அலர்ஜியை கட்டுபடுத்தும்.


தேனுடன் இஞ்சிச் சாறு அவசியம்


latest tamil news

இந்த குளிர்கால வறண்ட சீதோஷ்ண நிலையில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், உடம்பிற்கு சரியான சக்தியை கொடுக்க தினமும் தேனுடன், சிறிதளவு இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X