உச்சத்தில் இருந்து விழ காத்திருக்கிறதா சந்தை? நிபுணர்கள் சொல்வதென்ன!

Updated : டிச 01, 2022 | Added : டிச 01, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
இந்தியப் பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து முதலீடு செய்து வந்ததால், சென்செக்ஸ் மற்றும் நிப்டி இதுவரையில்லாத புதிய உச்சத்தை கண்டுள்ளது. இனி தான் சிறிய முதலீட்டாளர்கள் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும் என பங்குச்சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.நவம்பர் மாதத்தில் வெளிநாட்டு போர்ட்போலியோ
Nifty50, StockMarket, பங்குச்சந்தை, Sensex, BankNifty, StockIdeas, NSE,BSE, பங்குவர்த்தகம்

இந்தியப் பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து முதலீடு செய்து வந்ததால், சென்செக்ஸ் மற்றும் நிப்டி இதுவரையில்லாத புதிய உச்சத்தை கண்டுள்ளது. இனி தான் சிறிய முதலீட்டாளர்கள் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும் என பங்குச்சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நவம்பர் மாதத்தில் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்தியப் பங்குச்சந்தைகளில் ரூ.22,546 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதே சமயம் மற்றொரு புறம் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DII) 6,300 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை வெளியே எடுத்துள்ளனர். நேற்று (நவ., 30) மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 9,010 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளனர். டி.ஐ.ஐ.,க்கள் 4,056 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.


ஜி.டி.பி., வளர்ச்சி குறைவு


நடப்பு டிசம்பர் மாதத்தில் சந்தையில் பெரிய சரிவு ஏற்படவில்லை எனில், 2022, நிப்டிக்கு தொடர்ந்து ஏற்றம் கண்ட ஏழாவது ஆண்டாக அமையும். இந்நிலையில் தான் சமீபத்தில் இரண்டாவது காலாண்டுக்கான ஜிடிபி விவரங்கள் வெளியாகின. இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக குறைந்துள்ளதை அவை காட்டின. இருந்த போதிலும் இந்த தகவல்கள் சந்தைகளைப் பாதிக்கவில்லை. ஆனால், பங்குச்சந்தை ஆய்வாளர்கள் அதனை ஒரு எச்சரிக்கை அறிகுறியாகக் கருதுகின்றனர்.


மீண்டும் 15,000-ல் நிப்டி?


latest tamil news

நிர்மல்பேங் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் சி.இ.ஓ., ராகுல் அரோரா கூறுகையில், “சந்தையின் தற்போதைய அளவு நியாயமான அளவாக இல்லை. ஒரு பெரிய வீழ்ச்சி வரும். இந்த உச்ச நிலையில் இருந்து சந்தை மெதுவாக செயல்படக்கூடும். 2023 முதல் பாதியில் நிப்டி 15,000 அளவுக்குச் சரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உலகளாவிய அளவில் ஜிடிபி வளர்ச்சி குறைவது, இந்தியா உட்பட பெரும்பாலான முக்கிய உலகப் பொருளாதாரங்களின் வருமானம் குறைவதற்கு வழிவகுக்கும். இது போன்ற சூழலில் தற்போதைய சந்தை மதிப்பை நாம் நியாயப்படுத்த முடியாது. உள்நாட்டு பண்ட் நிறுவனங்கள் ஏற்கனவே எச்சரிக்கையாக உள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகள் தற்போது அதிக விலையில் காணப்படுகின்றன. அதே சமயம், எதிர்பார்க்கப்படும் வீழ்ச்சிக்கு பின்னர், சந்தையின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அவர்களே காரணமாக இருப்பார்கள்.” இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (10)

V.sudhakar - Madurai ,இந்தியா
03-டிச-202213:07:59 IST Report Abuse
V.sudhakar Some community people deliberately operating share Market to high
Rate this:
Cancel
Sathya - Chennai,இந்தியா
02-டிச-202211:21:18 IST Report Abuse
Sathya உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் ஏனெனில் இதுவும் ஒரு வகையான சூதாட்டமே ஆம் இப்போ உங்களை கருத்தை தெரிவிக்கும் வகையில் நீங்களும் இதில் நேரத்தை வீணடிக்கிறீர்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-டிச-202205:18:12 IST Report Abuse
g.s,rajan இனிமேல் வீழ்ச்சிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X