சென்னை: தனது சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வரி பாக்கியை செலுத்தாததால் தான் சொத்து முடக்கப்பட்டது. வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பினோம். ஆனாலும் அதனை செலுத்தவில்லை.
வரி வசூல் மேல்முறையீட்டு நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் முடக்கப்பட்டது. மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த விஜயபாஸ்கர் முயற்சி செய்கிறார். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை டிச.,12க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.