வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயை கூட குறைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் அதிகமாக குறைந்துள்ளது. நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை ரூ10க்கு மேல் குறைக்கலாம். ஆனால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட குறைக்கவில்லை. இந்திய மக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரதமர் தன்னை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2014 மே 16 ல் டில்லியில் கச்சா எண்ணெய் ஒரு பாரல் விலை 107.09 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.51 ஆகவும், டீசல் விலை ரூ.57.28 ஆகவும் உள்ளது.
இந்தாண்டு டிச.,1 ல் கச்சா எண்ணெ் விலை ஒரு பேரல் விலை 87.55 டாலர். ஆனால், பெட்ரோல் விலை ரூ.96.72, டீசல் விலை ரூ.89.62 ஆக உள்ளது. கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், பா.ஜ.,வின் கொள்ளை அதிகமாக உள்ளது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.