வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத் :குஜராத் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆமதாபாத்தில் பிரம்மாண்ட பேரணி நடத்தினார்.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 182 உறுப்பினர்கள் உடைய சட்டசபையில், முதல்கட்டமாக 89 இடங்களுக்கு மட்டும் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. பிரதமர் மோடியின் செல்வாக்கை தக்க வைக்கும் அக்னிப் பரீட்சையாக இத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் 5-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி ஆமதாபாத்தில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
![]()
|
இன்று ஆமதாபாத் நகரில் துவங்கி சாந்த்ஹிடா, ஹீராவாடி, ஹாட்கீஸ்வர், மணி நகர், தாலினிமாடா,ஜிவ்ராஜ் பார்க் என முக்கிய நகரங்கள் வழியாக 50 கி.மீ. தொலைவிற்கு 3 மணி நேரம் பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.
பிரசார வேனில் மேற்கூரையில் நின்று பொதுமக்களை பார்த்து கையசைத்து சென்றார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கானோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். மோடி நடத்திய பேரணியில் இது தான் மிக நீண்ட பேரணி என பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆம்புலன்சிற்கு வழிவிட்ட மோடி பிரசார வாகனம்
இன்று நடந்த பேரணியின் போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. உடனே மோடி சென்ற பிரசார வாகனம் ஆம்புலன்சிற்கு வழிவிட ஏதுவாக ஒதுங்கியது. உடனே ஆம்புலன்ஸ் எந்தவித சிரமமின்றி வேகமாக சென்றது.