மதுரை: மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தமிழகத்தில் டிசம்பர் மாத வடகிழக்கு பருவமழையின் அளவு இயல்பு அளவை ஒட்டியே
இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
![]()
|
மதுரையில் பெரியார்நிலையம், பழங்காநத்தம், காளவாசல்,கோச்சடை, ஆரப்பாளையம் , கரிமேடு,சிம்மக்கல், கோரிப்பாளையம், கோ.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மிதமானமழை பெய்ய வாயப்பு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
![]() |