குடும்ப செலவு தகராறில் கொலை : காதலியை கொன்றவர் தகவல்

Updated : டிச 01, 2022 | Added : டிச 01, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி:குடும்ப செலவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக, காதலியைக் கொன்று துண்டு துண்டாக்கிய அப்தாப் புனேவாலா, 'நார்கோ' பரிசோதனையில் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் புனேவாலா, ஷ்ரத்தா வால்கர்இருவரும் காதலர்களாக பழகி வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பைத் தொடர்ந்து இருவரும் புதுடில்லிக்கு
குடும்ப ,செலவு தகராறு, கொலை ,காதலி, தகவல்

புதுடில்லி:குடும்ப செலவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக, காதலியைக் கொன்று துண்டு துண்டாக்கிய அப்தாப் புனேவாலா, 'நார்கோ' பரிசோதனையில் தெரிவித்துள்ளார்.


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் புனேவாலா, ஷ்ரத்தா வால்கர்இருவரும் காதலர்களாக பழகி வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பைத் தொடர்ந்து இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர்.இதற்கிடையே, கடந்த மே மாதம் ஷ்ரத்தாவைக் கொலை செய்து, ௩௫ துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியது சமீபத்தில் தெரியவந்தது.கைது செய்யப்பட்டுள்ள அப்தாப், விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதையடுத்து, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன்படி அவருக்கு சமீபத்தில், 'பாலிகிராப்' பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'நார்கோ அனாலசிஸ்' எனப்படும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, குடும்ப செலவு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது வந்த ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் அப்தாப் கூறியதாக தெரிகிறது.


போலீசில் சிக்காமல் இருக்க, ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக்கி பல இடங்களில் வீசியதாகவும், அவருடைய பொருட்களை பல இடங்களில் வீசியதாகவும் அப்தாப் கூறியுள்ளார்.இந்த பரிசோதனைகளில் அப்தாப் தெரிவிக்கும் தகவல்கள் சட்டப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது. அதே நேரத்தில் இந்த தகவல்களின் அடிப்படையில், போலீசார் மேல் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரிக்க முடியும்.


இதற்கிடையே, பல்வேறு இடங்களில் கிடைத்த ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள், மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இதன்பிறகே, இந்த வழக்கின் விசாரணை தீவிரமடையும் என போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (4)

Sami - Tirupur,இந்தியா
02-டிச-202206:23:36 IST Report Abuse
Sami சமூகம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனைகள் மதம், இனம், மொழி என எந்த பாகுபாடும் இன்றி விரைவில் நிறைவேற்றப்படாத வரை குற்றங்கள் நிகழாமல் தடுக்க இயலாது. சினிமா மற்றும் ஊடகங்கள் வழியே தவறான வன்முறைச் செயல்கள் மட்டுமே பெரிதும் மதிக்கப்படுபவையாக சித்தரிக்கப் படுகின்றன. கல்விக்கூடங்களில் எதிர்கால இளைஞர்களுக்கு நல்ல பண்புகளை சொல்லிக்கொடுக்காமல் வெறும் மதிப்பெண் பெரும் இயந்திரங்கலாய் உருவாக்குவதில் நாம் பெரும் முனைப்புடன் செயல்படுகிறோம். சுதந்திரம் இன்று தவறுகளுக்கு கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. நல்ல தலைமுறை எதிர்காலத்தில் உருவாகும் என்பது கனவாகிவிடுமோ???
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
01-டிச-202222:39:45 IST Report Abuse
g.s,rajan பணம் பத்தும் செய்யும் .
Rate this:
jagan - Chennai,இலங்கை
02-டிச-202200:00:39 IST Report Abuse
jaganமூர்க்கன் சும்மாவே செய்வான்...
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
01-டிச-202221:20:27 IST Report Abuse
Siva குற்றம் உறுதி தண்டனைக்கு என்ன தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X