வங்கிகள் வழங்கும் கடன்களில் பிரபலமானது தனிநபர் கடன். வாழ்க்கையில் திடீரென ஏற்படும் பெரிய அளவிலான பணத்தேவைக்கு நடுத்தர வர்க்கத்தினர் இதனை நம்பியே உள்ளனர். குறித்த காலத்திற்குள் தவனையைச் செலுத்தி வந்தால் தனிநபர் கடன், வெளியில் தனியாரிடம் வட்டிக்கு பணம் வாங்குவதை விட சிறந்த ஒன்று. தற்போதைய உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தில் எந்த வங்கிகள் ஓரளவுக்கு நியாயமான வட்டியில் தனிநபர் கடன் வழங்குகின்றன என பார்ப்போம். பேங்க்பஜார் இணையதள தகவல் படி, 10 வங்கிகள் 8.9% முதல் 10.55% வரம்பில் தனிநபர் கடன் வழங்குகின்றன.
பேங்க் ஆப் மஹாராஷ்டிரா
ஐந்து வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் பேங்க் ஆப் மஹாராஷ்டிரா ரூ.5 லட்சம் தனிநபர் கடன் வழங்குகிறது. இதற்கான வட்டி விகிதம் 8.9%. சிபில் ஸ்கோர், முந்தைய கடன் வரலாறு, செலவு செய்யும் முறை ஆகியவற்றை பொறுத்து தான் இந்த குறைந்த வட்டி கிடைக்கும். இல்லையெனில் வட்டி எகிறும். 5 லட்ச ரூபாய்க்கு 8.9% வட்டி எனில் மாதம் ரூ.10,355 கட்ட வேண்டி இருக்கும். கடன் தொகையில் 1% பிராசசிங் கட்டணம் உண்டு. முன்னரே கடனை முடித்துக் கொள்வது எனில் அதற்கு கட்டணம் ஏதுமில்லை.
பேங்க் ஆஃப் இந்தியா
அரசு வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா 5 ஆண்டுகால அவகாசத்துடன் ரூ.5 லட்சம் தனிநபர் கடனுக்கு 9.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதற்கான மாதத் தவணை ரூ.10,562.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, 5 ஆண்டுகால அவகாசத்துடன் ரூ.5 லட்சம் தனிநபர் கடனுக்கு 9.8% வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. அதற்கான இஎம்ஐ ரூ.10,574 ஆக இருக்கும்.
![]()
|
யெஸ் வங்கி
தனியார் துறையான யெஸ் வங்கி தனிநபர் கடனுக்கு 10% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஐந்தாண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.10,624 ஆகும்.
பேங்க் ஆப் பரோடா
அரசுக்கு சொந்தமான பேங்க் ஆப் பரோடா ரூ.5 லட்சத்துக்கு 10.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதற்கான இஎம்ஐ ரூ.10,673 ஆக உள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி
10.25% வட்டியில் கோடக் மஹிந்திரா வங்கி ரூ.5 லட்சத்துக்கான கடனை 5 ஆண்டுகால அவகாசத்துடன் வழங்குகிறது. அதற்கான மாத தவணை ரூ.10,685.
இந்தியன் வங்கி
மற்றொரு பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, தனிநபர் கடனுக்கு 10.3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதற்கான மாதாந்திர தவணை ரூ.10,697 ஆகும்.
பெடரல் வங்கி
தனியார் துறையைச் சேர்ந்த பெடரல் வங்கி தனிநபர் கடனுக்கு 10.49% வட்டி வசூலிக்கிறது. ஐடிஎப்சி மற்றும் இண்டஸ்இண்ட் ஆகியவையும், ரூ.5 லட்சம் கடனுக்கு அதே வட்டி விகிதங்களை பெறுகின்றன. அதற்கான இஎம்ஐ ரூ.10,744
எஸ்.பி.ஐ.,
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., பெர்சனல் லோன்களுக்கு மிக அதிக வட்டியை வசூலிக்கிறது. 10.55% வட்டி வசூலிக்கிறது. அதன்படி இஎம்ஐ கணக்கிட்டால் மாதம் ரூ.10,759 வருகிறது.