பள்ளி மாணவியை தாக்கி கொள்ளை முயற்சி

Added : டிச 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநகரி மேல தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் 41 விவசாயி இவரது மனைவி வனிதா இவர்கது மகள் சுவாதி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மாலை கமலக்கண்ணனும் அவரது மனைவியும் வேலை நிமித்தமாக
 பள்ளி மாணவியை தாக்கி கொள்ளை முயற்சி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநகரி மேல தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் 41 விவசாயி இவரது மனைவி வனிதா இவர்கது மகள் சுவாதி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மாலை கமலக்கண்ணனும் அவரது மனைவியும் வேலை நிமித்தமாக மயிலாடுதுறை சென்றுள்ளனர். பள்ளி சென்று வீடு திரும்பி மாணவி சுவாதி பெற்றோர் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து வீட்டின்னுள்ளே சென்றுள்ளார்.


அப்போது வீட்டின் மற்றொரு அறைக்கு சென்ற போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சுவாதியை தாக்கி விட்டு அங்கிருந்து வேலி ஏறி குதித்து டூவீலரில் தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து சுவாதியின் சத்தம் கேட்டு திரண்டு வந்த கிராம மக்கள்காயம் அடைந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.


தகவல் அறிந்த திருவெண்காடு மற்றும் சீர்காழி போலீசார் சம்பவ இடம் மற்றும் சுவாதியை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பிச் சென்ற மர்மநபர்கள் குறித்தும் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்த போது இடையூறாக வந்த மாணவி சுவாதியை தாக்கி விட்டு தப்பி கூடியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (1)

raja - Cotonou,பெனின்
02-டிச-202209:47:52 IST Report Abuse
raja சட்டம் ஒழுங்கு விடியல் ஆட்சியில் சூப்பரா இருக்கிறது பிடிக்காமல் சிலர் வயிறு எரிந்து இதுபோல் செய்கிறார்கள் என்று நம்பர் ஒன்னு பிரின்சிபால் சொல்லுவான் பாருங்களேன்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X