ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியை கண்டித்து தி.மு.க.,அ.தி.மு.க.,பா.ஜ.,பா.ம.க., கவுன்சிலர்கள் அதிகாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் அத்தாணிசாலையில் அமைந்துள்ள தினசரி மார்க்கெட் கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. வளாகத்தினுள் இருந்த 100 ஆண்டு பழமையான விலை உயர்ந்த மரங்கள், பழைய கட்டிட மேற்கூரை பயன்பாட்டில் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள், இரும்பு பட்டா, மற்றும் இரும்பு குழாய்கள் பல லட்சத்திற்க்கும் அதிகமானதாகும். முறையாக நகர்மன்ற கூட்ட தீர்மானம் கொண்டு வராமல், நகர்மன்ற உருப்பினர்களுக்கும் தெரியாமல் இரவோடு இரவாக கடத்தப்பட்டுள்ளது. எனக்கூறி அதை கண்டித்து தி.மு.க.,அ.தி.மு.க.,பா.ஜ.,பா.ம.க., உள்ளிட்ட 15 வார்டு கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டனர்.
பின்பு நகராட்சி கமிஷ்னர் (பொறுப்பு) ரவி மீட்டிங் சென்று விட்டார் மாலை வந்து பாருங்கள் என தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். பின்பு மாலை வழக்கமாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ராஜா ஆய்வு பணிக்காக வந்திருந்தார்.அவரிடமும் கோரிக்கை குறித்து பேசினார்கள். இதுகுறித்து மனுவாக கொடுத்தால் விசாரிப்பதாக கூறிவிட்டு சென்றார்.
சத்தியமங்கலம் நகராட்சியை தி.மு.க.,அ.தி.மு.க.,பா.ஜ.,பா.ம.க.,கவுன்சிலர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் நகராட்சி அதிகாரியை முற்றுகையிட்ட வீடியோ வழக்கம் போல் வைரலானது. மேலும் இதுகுறித்து நகராட்சி கமிஷ்னர் (பொறுப்பு) ரவியிடம் கேட்ட போது இதுசம்மந்தமாக என்னிடம் புகார் எதுவும் தரவில்லை.வாய்மொழியாக தெரிவித்துள்ளனர்.என்றார்.