மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட கோணாதி கிராமம், வார்டு ஒன்றில், பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையில், இந்த ஏரி உடைந்து விட்டது.
அதை சீரமைக்கக்கோரி, பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலம் துவங்கிவிட்டதால், ஏரியில் உடைந்த பகுதி வழியாக, மழை நீர் வெளியேறி வீணானது.
எனவே, உடைந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம், காட்டாங் கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு, பல முறை புகார் அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதனால், ஏரியின் உடைந்த பகுதி சீரமைக்கப்பட்டது.