சத்தியமங்கலம் :திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவர் மீது மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி.டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் இன்று மதியம் கர்நாடகாவிலிருந்து கோவைக்கு இரும்பு ஸ்டீல் ஏற்றிவந்த லாரி திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.
24வது கொண்டை ஊசி வளைவில் வரும்போது நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவற்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.நல் வாய்ப்பாக அந்தரத்தில் லாரி தொங்கி கொண்டிருந்தது. லாரியை ஓட்டிவந்த புதுவடவள்ளியை சேர்ந்த டிரைவர் எட்டிக்குதித்து உயிர் தப்பினார்.பின்பு மதியம் 3மணியளவில் மீட்பு வாகனம் மூலம் லாரி மீட்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.
சாலையோரத்தில் லாரி விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.