மைசூரு, ''சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநில சுற்றுப்பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளேன்,'' என ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.
மைசூரு, நஞ்சன்கூடின், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு தேவகவுடா நேற்று வந்தார்.
பின், அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு, நான் செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட அனைவரும் பஞ்சரத்ன யாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.
![]()
|
யாத்திரை செல்லும் ஒவ்வொரு கிராமத்திலும், எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ., க்கள், தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்பர்.
வீடு, வீடாக சென்று பணியாற்றும்படி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். நானும், மாநில சுற்றுப்பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளேன். ம.ஜ.த., வேட்பாளர்களின் முதல் பட்டியல், நிரந்தரமானது அல்ல. தினமும் ஆய்வு நடக்கிறது.
இதன் அடிப்படையில், வேட்பாளர்கள் பட்டியல் மாறும். கட்சியில் இருந்து, விலகி நிற்கும் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா, குமாரசாமியுடன் பேசியுள்ளார்.
ஹாசன் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவுக்கு, எடியூரப்பா அரசு இருந்த போது, அனைத்து சக்தியும் கிடைத்தது. அவரது சக்திக்கு, எடியூரப்பாவும், அவரது பிள்ளைகளும் காரணம்.
ஹாசன் தொகுதி ம.ஜ.த., சீட்டை, பலரும் எதிர்பார்க்கின்றனர். குமாரசாமியும், ரேவண்ணாவும் ஆலோசித்து வேட்பாளர்களை முடிவு செய்வர். அடுத்து யார் முதல்வராக வேண்டும் என்பதை, மக்கள் தீர்மானிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement