பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் : 16 புதிய மசோதாக்கள் தாக்கல்

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி :வரும் 7ம் தேதி கூடவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7ம் தேதி துவங்குகிறது. இதில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய மசோதாக்களின் உத்தேச பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்த கூட்டத்தொடரில், 1948ல் பிறப்பிக்கப்பட்ட பல் மருத்துவர்கள் சட்டத்தை
 பார்லி., ,குளிர்கால கூட்டத்தொடர் , 16 புதிய மசோதாக்கள்

புதுடில்லி :வரும் 7ம் தேதி கூடவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7ம் தேதி துவங்குகிறது. இதில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய மசோதாக்களின் உத்தேச பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில், 1948ல் பிறப்பிக்கப்பட்ட பல் மருத்துவர்கள் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா மற்றும் 1947ல் இயற்றப்பட்ட இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் கமிஷனை உருவாக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.


latest tamil news


பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், மற்றும் தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் உள்ளிட்ட நோக்கத்துடன் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா உட்பட மொத்தம், 16 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202205:33:22 IST Report Abuse
J.V. Iyer அறநிலையத்துறையை நீக்க ஒரு மசோதா கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். கோவில் செல்வத்தை பாதுகாத்தாலே நாடு உருப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X