மங்களூரு 'குக்கர்' குண்டு வழக்கு என்.ஐ.ஏ.,விசாரணை துவக்கம்

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மங்களூரு :மங்களூரு 'குக்கர்' குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக துவக்கினர். கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பம்ப்வெல் பகுதியில், கடந்த 19ம் தேதி, ஷிவமொகா தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முகமது ஷாரிக், 24, என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு கொண்டு சென்றபோது வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம்,60, ஷாரிக் படுகாயம் அடைந்து
 மங்களூரு குக்கர் குண்டு, என்ஐ.ஏ, விசாரணை

மங்களூரு :மங்களூரு 'குக்கர்' குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக துவக்கினர்.

கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பம்ப்வெல் பகுதியில், கடந்த 19ம் தேதி, ஷிவமொகா தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முகமது ஷாரிக், 24, என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு கொண்டு சென்றபோது வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம்,60, ஷாரிக் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


latest tamil news


'இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும்' என, கர்நாடகஅரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து, கடந்த 24ம் தேதி என்.ஐ.ஏ.,விடம் வழக்கை ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக விசாரணையை துவக்கினர். மூன்று குழுக்களாக மங்களூரு வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அவர்களிடம் குண்டு வெடிப்பு குறித்த தகவல்களை பெற்றுக் கொண்டனர்.இதற்கிடையே, மங்களூரு போலீசார் ஷாரிக்கிடம் மூன்று நாட்களாக விசாரணை நடத்தினர். அவரிடம், 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். என்.ஐ.ஏ., அதிகாரிகளும் ஷாரிக்கிடம் நேற்று விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.

ஷாரிக்குக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளது. இந்த பணத்தை, அவர் மைசூரில் பலரின் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக, மங்களூரு போலீசார் மைசூரில் 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர். அவர்களிடமும் விசாரிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (8)

arjerlin - chennai,இந்தியா
02-டிச-202213:48:30 IST Report Abuse
arjerlin பொய்யர்கள்
Rate this:
Cancel
02-டிச-202212:54:39 IST Report Abuse
மோகனசுந்தரம் என்ன ஒரு அநியாயம். நடந்து முடிந்த இத்தனை நாட்கள் கழித்து இப்போதுதான் துவக்கமா. நன்றாக விடிஞ்சது போ.
Rate this:
Cancel
Ram - Dindigul,இந்தியா
02-டிச-202210:25:31 IST Report Abuse
Ram ஆறு நாட்கள் கழித்துதான் கர்நாடகா பிஜேபி அரசு என்.ஐ.ஏ. ஊக்கு கொடுக்க பரிந்துரை செய்தது. இதற்குள் கர்நாடகா பிஜேபி அரசு தடயங்களை அழித்து விட்டது என்று ஏன் நம்ம கவர்னர் மற்றும் கர்நாடக சிங்கம் IPS ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X