அமைச்சரையே 'ஓவர்டேக்' செய்யும் அதிகாரிகள்!

Added : டிச 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
'அமைச்சரையே அதிகாரிகள், 'ஓவர்டேக்' பண்றா ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியை ஒரு மடக்கு குடித்தார் குப்பண்ணா.''எந்த துறை அதிகாரி பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் தலைவரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி இருக்கார்... துணை தலைவரா, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருக்கணும் ஓய்...
CMDA,Minister, Officers,Chennai Metropolitan Development Authority

'அமைச்சரையே அதிகாரிகள், 'ஓவர்டேக்' பண்றா ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியை ஒரு மடக்கு குடித்தார் குப்பண்ணா.


''எந்த துறை அதிகாரி பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.


''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் தலைவரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி இருக்கார்... துணை தலைவரா, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருக்கணும் ஓய்...


latest tamil news

''ஆனா, வீட்டு வசதித் துறை செயலர் ஹதேஷ் குமார் மக்வானா, அந்த இடத்துல வேற யாரையும் நியமிக்காம, தானே கூடுதல் பொறுப்பை ஏத்துண்டுட்டார்...


''ஆரம்பத்துல இருந்தே இவருக்கும், அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தம்... இதனால, சி.எம்.டி.ஏ., சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கறதுல, ஹதேஷ் குமாரும், மெம்பர் செகரட்டரியும் தனி ஆவர்த்தனம் வாசிக்கறா ஓய்...


''சமீபத்துல நடந்த கூட்டத்துல கூட, அமைச்சரின் கருத்துக்கு மாறான முடிவுகளையே இவா எடுத்திருக்கா... இது, பலரையும் முகம் சுளிக்க வச்சுடுத்து... 'முதல்வர் தலையிட்டு பஞ்சாயத்து செஞ்சா தான் நிலைமை சரியாகும்'னு மத்த அதிகாரிகள் நினைக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

Advertisement




வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202205:31:40 IST Report Abuse
J.V. Iyer இப்படியே ஊழல் பெருகினால், வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல தமிழக பாஜகவுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் நிறைய வருடங்கள் ஆகும்.
Rate this:
baala - coimbatore,இந்தியா
02-டிச-202210:22:49 IST Report Abuse
baalaஅருமையான நகைச்சுவை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X