மனித மூளையில் கம்ப்யூட்டர் பதிப்பு: எலான் மஸ்கின் அடுத்த அதிரடி

Added : டிச 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
லண்டன்: எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள 'நியுராலிங்க்' நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டரை பதிக்கும் சோதனை முயற்சியில், இன்னும் ஆறு மாதத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சோதனைஇந்நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மனித உடலில் மிகச் சிறிய கம்ப்யூட்டர்களை பதிப்பதன் வாயிலாக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பாகங்களின் செயல்பாட்டை
 மனித மூளையில் கம்ப்யூட்டர் பதிப்பு: எலான் மஸ்கின் அடுத்த அதிரடி

லண்டன்: எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள 'நியுராலிங்க்' நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டரை பதிக்கும் சோதனை முயற்சியில், இன்னும் ஆறு மாதத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.



சோதனை


இந்நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மனித உடலில் மிகச் சிறிய கம்ப்யூட்டர்களை பதிப்பதன் வாயிலாக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பாகங்களின் செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


குறிப்பாக, மனித மூளையில் இந்த கம்ப்யூட்டரை பதிப்பதன் வாயிலாக, அவனது மூளையின் செயல்பாட்டை அந்த கம்ப்யூட்டர் புரிந்துகொண்டு, அதை திரையில் எழுத்துக்களாக வெளிப்படுத்தி விடும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பலனளிக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


latest tamil news

ஏற்கனவே பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்குகளில் பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்ட நிலையில், இன்னும் ஆறு மாதங்களில் மனிதனிடத்திலும் இந்த சோதனையை மேற்கொள்ள இருப்பதாக நியுராலிங்க் அறிவித்துள்ளது.


மூளையில் மட்டுமின்றி, முதுகுத் தண்டில் பதிப்பதால், முழு உடம்பின் செயல்பாடுகளையும் மீட்கலாம்; கண் பகுதியில் பதிப்பதன் வாயிலாக, பார்வையற்றோர் பார்வை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



தகவல் பரிமாற்றம்


குரங்கின் வாயிலாக 'டெலிபதி டைப்பிங்' செய்வதும், நிறுவனத்தால் நிகழ்த்தி காட்டப்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் மனிதனுக்கும், இயந்திரங்களுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு சாதனமாக இது மாறும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Chakkaravarthi Sk - chennai,இந்தியா
02-டிச-202212:40:59 IST Report Abuse
Chakkaravarthi Sk இவருக்கு எதோ பூச்சி கடித்திருக்கிறது அல்லது ரஷ்யாவில் உறைந்து போன ஏரியிலிருந்து வெளியேறிய ஒரு வைரஸ் இவரை தாக்கி இருக்கலாம். இந்த னாய் பரவு வதற்குள் கடவுள் ஏதேனும் அதிசயம் நிகழ்த்தி வாயை கட்டு படுத்தினால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
02-டிச-202210:16:36 IST Report Abuse
raja செய்ங்க செய்க ஆனா திருட்டு திராவிட ஓங்கொல் விங்யான கொள்ளை கூட்ட மூளையை மட்டும் கம்யூட்டரில் பதிசிடாதீங்க அப்புறம் அந்த நாலு பக்க தகடு மட்டும் இருக்கும் ராம் சி பி யு எல்லாம் திருட்டு போயிடும்.. கேட்டா ட்ரோஜன் போன்ற கம்பியூட்டர் வைரசு தின்னுடிச்சி சொல்லி புடுவானுவோ ஜாக்கிரதை....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202206:05:13 IST Report Abuse
Kasimani Baskaran ஏற்கனவே பல மிலிட்டரி ஆய்வுகள் இதை சிறப்பாக செய்து விட்டன. அவை சந்தைப்படுத்தப்பட்டால் ஆபத்துக்கள் ஏறாளம். அதாவது கொரில்லாவுக்கு மனிதன் அளவுக்கு மூளையைக் கொடுத்தால் அது மனிதனை லாவகமாக பிடித்து ஒரே அடியில் மனிதனின் மண்டையை உடைத்து தூக்கி வீசி விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X