'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட சர்ச்சை பேச்சு: இஸ்ரேல் சினிமா இயக்குனர் விளக்கம்

Added : டிச 02, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி : ''தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால், முழுமையாக மன்னிப்பு கோருகிறேன். காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரையோ, பாதிக்கப்பட்டவர்களையோ அவமதிப்பது என் நோக்கம் அல்ல,'' என, இஸ்ரேல் திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட் தெரிவித்தார்.இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது திரையிடல் நிகழ்வு, கோவாவில்
Nadav Lapid, apologises,Kashmir Files,vulgar propaganda, காஷ்மீர் பைல்ஸ்

புதுடில்லி : ''தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால், முழுமையாக மன்னிப்பு கோருகிறேன். காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரையோ, பாதிக்கப்பட்டவர்களையோ அவமதிப்பது என் நோக்கம் அல்ல,'' என, இஸ்ரேல் திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட் தெரிவித்தார்.


இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது திரையிடல் நிகழ்வு, கோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட், விழா நடுவர் குழுவுக்கு தலைமை வகித்தார். இதில், விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த 22ம் தேதி திரையிடப்பட்டது.


திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இயக்குனர் நடாவ் லபிட் பேசும்போது, ''இந்த படம் பிரசாரத்தை முன்வைக்கிறது. மிக மோசமான கருத்துக்களை பேசுகிறது. ''இந்திய சர்வதேச திரைப்பட விழா போன்ற மதிப்புமிக்க அரங்கில் திரையிட தகுதியற்றது,'' என, கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இயக்குனர் நடாவ் லபிட் இந்தியாவின் அழைப்பை அவமானப்படுத்திவிட்டதாக, நம் நாட்டுக்கான இஸ்ரேல் துாதர் கண்டனம் தெரிவித்தார். லபிட் பேசியது முழுக்க முழுக்க தனிப்பட்ட கருத்து. இதில் இருந்து விலகியிருக்க விரும்புவதாக, நடுவர் குழுவில் இடம் பெற்ற இதர உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நிறைவு விழா பேச்சு குறித்து இயக்குனர் நடாவ் லபிட் விளக்கம் அளித்துள்ளார்.


latest tamil news


அதன் விபரம்:


காஷ்மீர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஒருவேளை என் கருத்து அப்படி புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால், இதற்காக முழுமையாக மன்னிப்பு கோருகிறேன். அதே நேரம், அந்தப் படம் மிகவும் மோசமான கருத்துகளை பிரசாரம் செய்கிறது. திரைப்பட விழாவில் திரையிட தகுதியற்றது என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்க முடியாது.


இது, என் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. படத்தை பார்த்த பின், ஒட்டுமொத்த நடுவர் குழுவும் அதே கருத்தை தான் பிரதிபலித்தது. படத்தில் பேசப்பட்டு உள்ள அரசியல், வரலாற்று சம்பவங்கள் அல்லது உயிரிழப்புகளை குறித்து நான் பேசவில்லை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பி பிழைத்தவர்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன்.


படத்தில் காட்டப்பட்டுள்ள மோசமான கருத்துகள், வன்முறைகள், சமூகத்தில் அமைதியற்ற நிலையையும், வன்முறை மற்றும் வெறுப்புணர்வையும் பரப்பும் என்பதால் தான் அப்படி பேசினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (25)

Nachiar - toronto,கனடா
02-டிச-202219:13:21 IST Report Abuse
Nachiar இந்தியாவை இந்துக்களை இந்து கலாசாரத்தை இழிவு படுத்தும் படம் என்றால் நிச்சயம் சர்வ தேச தரத்தைப் பெரும். கொஞ்சம் பின்நோக்கிப் போய் பாருங்கள் இந்த உண்மை தெரியும் . ஒட்டுன்னிகளை வளர்ப்பதுவும் அழிப்பதுவும் ரசிகர்கள் கையில். யாரெல்லாம் நம் சமயத்தை நாட்டை பாரம்பரியத்தை இழிவு படுத்தினார்கலோ அவர்கள் படத்தைப் பார்க்கதிரிகள் பாட்டை இசையை கேட்காதீர்கள். உங்கள் கையில் தான் உங்கள் மானம் உள்ளது. அவ்வளவு எளிது இந்தப் போராட்டம். செய்து தான் பாருங்களேன். ஜெய் ஹிந்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-டிச-202217:42:02 IST Report Abuse
Natarajan Ramanathan இவனால் இஸ்ரேலியர்கள் மீது இருந்த மரியாதையே போய்விட்டது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202217:25:53 IST Report Abuse
J.V. Iyer யூதர்களுக்கு நடந்தால் ஒருமாதிரி பேசும் நாக்கு, ஹிந்துக்களுக்கு மாட்டும் வேறு மாதிரி?? போங்கடா போக்கத்த பயலுவலா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X