பிரதமர் பாதுகாப்பு குளறுபடி புகார்: தமிழக அரசிடம் கவர்னர் விளக்கம் கேட்பு

Added : டிச 02, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்தபோது, பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த புகார் தொடர்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளார்.சென்னையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா, இந்தாண்டு ஜூலை, 28ல் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாகவும், போலீசார்
Governor,RN Ravi,Pm Modi,ஆளுநர்,கவர்னர்

சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்தபோது, பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த புகார் தொடர்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா, இந்தாண்டு ஜூலை, 28ல் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாகவும், போலீசார் வைத்திருந்த 'மெட்டல் டிடக்டர், டோர் மெட்டல் டிடக்டர்' போன்ற பல கருவிகள் வேலை செய்யவில்லை என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.


latest tamil news

இது தொடர்பாக, கடந்த மாதம், 29ம் தேதி, கவர்னர் ரவியை சந்தித்து, பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனு கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், 'பிரதமர் தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் எதுவும் ஏற்படவில்லை' என்றார்.

இந்த சூழ்நிலையில், அண்ணாமலை அளித்த புகார் மனு தொடர்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, தலைமை செயலர் இறையன்புக்கு, கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (26)

arjerlin - chennai,இந்தியா
02-டிச-202218:00:11 IST Report Abuse
arjerlin The Special Protection Group (SPG) is an agency of the Government of India whose sole responsibility is protecting the Prime Minister of India and in some cases, his or her family.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202217:23:35 IST Report Abuse
J.V. Iyer பூசி, மெழுகி உண்மையை மறைத்தால், நாளை தமிழக முதல்வர் பாதுகாப்புக்கும் இந்த அச்சுறுத்தல் இருக்கும். அப்ப என்ன செய்வார்கள்? அப்போதும் அது தக்காளித்தொக்கு?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
02-டிச-202217:17:53 IST Report Abuse
DVRR டி.ஜி.பி., சைலேந்திரபாபு??பரிதாபம் டிஜிபி??ஐ பி எஸ் ஆ இல்லை??????என்ற அளவுக்கு சந்தேகம் வருகின்றது உங்கள் நடவடிக்கை பிரகாரம்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X