சென்னை: கார்த்திகை தீபத்தையொட்டி, தாம்பரம் - திருவண்ணாமலை இடையே வரும், 6, 7ம் தேதிகளில், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பல்வேறு வழித்தடங்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை அருகே தாம்பரத்தில் இருந்து வரும், 6, 7ம் தேதிகளில் காலை, 8:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நண்பகல், 12:15 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்
திருவண்ணாமலையில் இருந்து மதியம், 1:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை, 5:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலுார் வழியாக இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.