எப்போது அதிகரிக்கும் ரயில்களின் வேகம்?

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
திருப்பூர்: சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவை இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பயணிகள் நேரத்தை மிச்சப்படுத்தி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, முக்கிய ரயில் வழித்தடங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அவ்வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது.

திருப்பூர்: சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவை இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



latest tamil news



பயணிகள் நேரத்தை மிச்சப்படுத்தி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, முக்கிய ரயில் வழித்தடங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அவ்வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. முதல்கட்டமாக குறிப்பிட்ட சில வழித்தடங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ரயில்வே வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வழித்தடங்கள் 'ஏ' மற்றும் 'பி' என வகைப்படுத்தப் பட்டுள்ளது. 'ஏ' வழித்தடத்தில், 160 கி.மீ., வேகத்திலும், 'பி' வழித்தடத்தில், 130 கி.மீ., வேகத்திலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களில், 70 கி.மீ., வேகத்தில் இயங்கும் ரயில்கள், 90 கி.மீ., வேகத்திலும், 90 கி.மீ., ஆக உள்ளவை, 110 கி.மீ., வேகத்துக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, சென்னை - பெங்களூரு வழித்தடத்தில், 160 கி.மீ., வேகத்திலும், சென்னை - ரேணிகுண்டா, 130 கி.மீ., வேகத்திலும் ரயில் இயக்க ஒப்புதல் கேட்டு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காட்பாடி - சேலம், சேலம் - கோவை இடையேயான மெயின் லைனில் ரயில்களின் வேகம் எப்போது அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.


latest tamil news



ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கோவை வடக்கு - மேட்டுப்பாளையம் இடையே, 90 கி.மீ., வேகத்தில் இயங்கும் ரயில்கள், 110 கி.மீ., ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் - ஜோலார்பேட்டை - போத்தனுார் வழித்தடம் குரூப் 'பி' பிரிவில் சேர்க்கப்பட்டு ரயில்கள் வேகத்தை, 130 கி.மீ., ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைக்கு சேலம் - ஈரோடு- திருப்பூர் - கோவை வழித்தடத்தில், 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் வேகம் கேட்டு கருத்துரு அனுப்ப வழித்தடம், சிக்னல், இன்ஜின் இழுவை திறன், தண்டவாள அமைப்பு, பாலம், வளைவு உள்ள இடங்கள், தாழ்வான, மேடான பகுதிகளில் வேகத்தை தாங்கும் திறனுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய வேண்டும். உள்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்திய பின்பே, ஒரு முடிவுக்கு வர முடியும்'' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (17)

g.s,rajan - chennai ,இந்தியா
02-டிச-202222:28:52 IST Report Abuse
g.s,rajan பாரதப் பிரதமர் மோடிஜி உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கும் சென்று வந்தார் என்பது பச்சைக் குழைந்தைக்குக் கூடத் தெரியும். ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-டிச-202221:47:45 IST Report Abuse
g.s,rajan அதிகமான ரயில் வண்டிகளை தமிழகத்துக்கு விட வேண்டும் ,தற்போது இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை இப்போது இருக்கும் மக்கள் தொகைக்கு கண்டிப்பாக பத்தாது .அதிவிரைவு ரயில்கள் ,பாசஞ்சர் ரயில்கள் போதுமான அளவு நாள் முழுதும் இயக்கப்படாமல் இருப்பதால் பயணிகளின் கூட்ட நெரிசல் எல்லா ரயில்களிலும் எப்பவும் இருந்து கொண்டேதான் இருக்கிறது .ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது மட்டும் பயணிகளின் நெரிசலுக்கு நிரந்தர தீர்வாகாது குறிப்பாக தமிழகத்தில் ரயில்களின் எண்ணிக்கை இன்னும் இரு மடங்கு அதிகரிக்க வேண்டும் .இரவு நேர ரயில்கள் ,பகல் நேர ரயில்கள் இன்னும் எண்ணிக்கையில் அதிகரிக்க வேண்டும் .குறிப்பாக வார விடுமுறை நாட்களில் தற்போது இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை கண்டிப்பாக போதாது .அவசரப்பயணம் ,திட்டமிடாமல் திடீர்ப் பயணம் ரயில்களில் மேற்கொள்பவர்கள் படும் பாடு சொல்லி மாளாது ,மிகவும் கஷ்டம் .நாய்படாத பாடுதான் படுக்கை வசதி மற்றும் உட்காரும் சீட் கிடைக்காததால் முன் பதிவு செய்யமுடியாமல் ரயில் பயணிகள் திண்டாடுகின்றனர் .முன் பதிவு செய்யாததால் முன் பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்து நரகவேதனையை அனுபவித்து வருகின்றனர் என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
Chennaivaasi - Chennai,இந்தியா
02-டிச-202217:12:58 IST Report Abuse
Chennaivaasi திருவாரூர் முதல் காரைக்குடி வரை புதிதாக நிறுவப்பட்ட பாதையை ஒழுங்காக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும். அதுபோல நாகப்பட்டினம் முதல் திருத்துறைப்பூண்டி வரை உள்ள பாதையை முடித்து பயன்படுத்தவும். இவை இரண்டும் திருவாரூர் மாவட்டத்திற்கு மிக முக்கியம் ஆனால் கம்யூனிஸ்ட் பகுதி என்பதால் மாற்றாந்தாய் மனப்பான்மை. இந்த பகுதிகள் எல்லாம் கடந்த முப்பது ஆண்டுகளாக இப்படியேதான் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X