வார ராசி பலனும் பரிகாரமும்

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (2.12.2022 - 8.12.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்:சுக்கிரன் நன்மைகளை வழங்குவார். நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும்.அசுவினி: வெள்ளி, சனியில் செலவுகள் அதிகரிக்கும். ஞாயிறு காலை முதல் விருப்பங்கள் நிறைவேறும். நட்பு வட்டத்தால் சங்கடங்கள் உண்டாக வாய்ப்புண்டு என்பதால்
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி, விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (2.12.2022 - 8.12.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்:


சுக்கிரன் நன்மைகளை வழங்குவார். நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும்.


அசுவினி: வெள்ளி, சனியில் செலவுகள் அதிகரிக்கும். ஞாயிறு காலை முதல் விருப்பங்கள் நிறைவேறும். நட்பு வட்டத்தால் சங்கடங்கள் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை.


பரணி: ஞாயிறு காலை முதல் எண்ணங்கள் நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்தாலும் விரய குருவால் செலவு அதிகரிக்கும்.


கார்த்திகை 1ம் பாதம்: ஆன்மிகத்தில் மனம் செல்லும். கோயில்களுக்கு சென்று வருவீர்கள். உங்கள் நட்சத்திர நாதன் மறைவு பெறுவதால் அரசு விஷயங்களில் கவனம் தேவை. தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபடுவர்.
ரிஷபம்:


கேது, புதன், குரு நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.latest tamil news

கார்த்திகை 2, 3, 4: வெள்ளி, சனியில் எண்ணங்கள் நிறைவேறும். ஞாயிறு முதல் செவ்வாய் மாலை வரை எதிர்பாராத செலவு ஏற்படும். தொழிலில் முன்னேற்றம், விரும்பியதை வாங்கும் நிலை உண்டாகும்.


ரோகிணி: முயற்சிக்கேற்ற பலன்களை இந்த வாரம் அடைவீர்கள். இதுவரை இருந்த பிரச்னைகளை இல்லாமல் செய்வீர்கள். திங்கள், செவ்வாயில் குடும்ப வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.


மிருகசீரிடம் 1, 2: லாப குருவால் சங்கடங்கள் இல்லாமல் போகும். திருமண முயற்சி நிறைவேறும். விஐபிகளின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். ஆறாமிட கேதுவால் எதிரி தொல்லை நீங்கும்.
மிதுனம்:


சூரியன், ராகு நன்மை வழங்குவார்கள். பெருமாளை வழிபட நன்மை கிடைக்கும்.


மிருகசீரிடம் 3, 4: நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். சிலருக்கு புதிய வேலை அமையும். செவ்வாய் மாலை முதல் வரவு செலவில் கவனம் தேவை.


திருவாதிரை: உங்கள் அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்தவற்றை அடைவதற்காக கடுமையாக போராடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். புதன், வியாழனில் செலவுகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் 1, 2, 3: ஆறாமிட சூரியன் நன்மைகளை வழங்குவார். உங்கள் திறமை வெளிப்படும். லாப ஸ்தான ராகுவால் வரவுகள் அதிகரிக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். சொத்து சேர்க்கை உண்டு.
கடகம்:


குரு, சுக்கிரன், புதன் நன்மை வழங்குவார்கள். சந்திரனை மனதில் நினைத்து செயல்படுங்கள்.


புனர்பூசம் 4: குரு பார்வையும் சந்திர பலமும் உங்கள் நிலையை உயர்த்தும். ஈடுபடும் செயல்கள் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். சிலருக்கு திருமண யோகம் கூடி வரும்.


பூசம்: உங்கள் செயல்கள் வெற்றியடையும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். எதிர்பார்த்தவற்றில் சாதகமான நிலை உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.


ஆயில்யம்: நினைத்ததை சாதித்து மகிழும் வாரம் இது. கடந்த வார நெருக்கடிகள் விலகும். பாக்கிய குருவால் முயற்சிகள் வெற்றி பெறும். செல்வாக்கு உயரும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
சிம்மம்:


கேது, சுக்கிரன், சனி நன்மை வழங்குவர். சூரிய வழிபாடு தடைகளை விலக்கும்.


latest tamil news


மகம்: வெள்ளி. சனியில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படும். ஞாயிறு முதல் நெருக்கடி விலகும். அரசு வழி ஆதாயம் காண்பீர்கள்.


பூரம்: ஞாயிறு காலை வரை தடுமாற்றம் உண்டாகலாம். தேவையற்ற பிரச்னைகள் தோன்றலாம். அதன்பின் நெருக்கடிகள் நீங்கும். உங்கள் எண்ணம் பலிதமாகும்.


உத்திரம் 1: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் சிந்தித்து செயல்படுவதும். நிதானத்தைக் கடை பிடிப்பதும் நன்மை தரும். ஞாயிறு முதல் முயற்சிகள் நிறைவேறும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.


சந்திராஷ்டமம்

2.12.2022 அதிகாலை 4:16 மணி - 4.12.2022 காலை 9:12 மணி
கன்னி:


சூரியன், சுக்கிரன் புதன், குரு நன்மை வழங்குவர். துர்கையை வழிபடுங்கள்.


உத்திரம் 2, 3, 4: வெள்ளி, சனியில் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு வாய்ப்புண்டாகும். ஞாயிறு முதல் செவ்வாய் மாலை வரை சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.


அஸ்தம்: இந்த வாரம் யோகமான வாரமாகும். முதல் இரண்டு நாட்களும் உங்கள் செயல்களில் வெற்றிதான். அரசு வழியில் நன்மை ஏற்படும். ஞாயிறு முதல் உங்கள் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் உண்டாகும்.


சித்திரை 1, 2: குலதெய்வ அருளால் குறைகள் தீரும். ஞாயிறு காலை வரை உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். மற்றவர்கள் மதிப்பிற்கு ஆளாவீர்கள். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் அவசியம்.


சந்திராஷ்டமம்

4.12.2022 காலை 9:13 மணி - 6.12.2022 மாலை 4:26 மணி
துலாம்:


சுக்கிரன் நன்மைகள் தருவார். வினைகள் தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்.


சித்திரை 3, 4: உங்கள் முயற்சிகள் நிறைவேறும். வியாபாரத்தில் தடைகள், குடும்பத்தில் குழப்பம் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். செவ்வாய் மாலை முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் அவசியம்.


சுவாதி: செவ்வாய் மாலை வரை செயல்கள் வெற்றியாகும். அதன்பின் உங்களையும் அறியாமல் சில சிக்கல்களில் சிக்குவீர்கள் என்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.


விசாகம் 1, 2, 3: செவ்வாய் மாலை வரை உங்களுக்கு நன்மையாகவே செல்லும். முயற்சிகள் வெற்றியாகும். எண்ணம் நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். அதன்பின் நிதானம் தேவை.


சந்திராஷ்டமம்

6:12.2022 மாலை 4:27 மணி - 9.12.2022 நள்ளிரவு 2:06 மணி
விருச்சிகம்:


சனி, குரு, சுக்கிரன், ராகு நன்மை வழங்குவர். தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மை சேரும்.


விசாகம் 4: வாரம் முழுவதும் முயற்சிகள் நிறைவேறும். துணிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். தொழிலில் உண்டான பிரச்னைகளை எதிர்கொண்டு ஆதாயம் காண்பீர்கள்.


அனுஷம்: உங்கள் வழியில் சென்று நினைத்ததில் வெற்றி பெறுவீர்கள். செல்வாக்கு உயரும். பணவரவும் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.


கேட்டை: சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.


சந்திராஷ்டமம் 9.12.2022 நள்ளிரவு 2:07 மணி - 11.12.2022 மதியம் 1:30 மணி
தனுசு:


சுக்கிரன், கேது நன்மை வழங்குவர். சனீஸ்வரரை வழிபடுங்கள்.


மூலம்: வெள்ளி, சனியில் உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும். ஞாயிறு முதல் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். சிலருக்கு இட மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும்.


பூராடம்: லாப ஸ்தான கேது சங்கடங்களை நீக்குவார், ஆற்றலை அதிகரிப்பார். பனிரெண்டாமிட சுக்கிரன் வருவாயை வழங்குவார். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவார். முயற்சிகள் வெற்றி பெறும்.


உத்திராடம் 1: வெள்ளி, சனியில் செலவுகள் அதிகரிக்கும். ன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஞாயிறு முதல் எண்ணியதை நிறைவேற்றி முடிப்பீர்கள். பணியாளர்கள் வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யப்படுவர்.
மகரம்:


சூரியன், சுக்கிரன் நன்மை வழங்குவார்கள். மீனாட்சியம்மனை எண்ணி செயல்படுங்கள்.


உத்திராடம் 2, 3, 4: வெள்ளி, சனியில் மனம் மகிழும்படியான சம்பவம் நடந்தேறும். ஞாயிறு, திங்கள், செவ்வாயில் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் வெளியூர் செல்வர். புதன், வியாழனில் எண்ணம் நிறைவேறும்.


திருவோணம்: துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்குகளால் உண்டான தொல்லை விலகும். அந்நியர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிக்கேற்ப லாபம் உணடு.


அவிட்டம் 1, 2: வெள்ளி, சனியில் முயற்சிகள் வெற்றி பெறும். ஞாயிறு முதல் குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்கள் எண்ணமும் செயலும் ஒன்றாகும். வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். வரவு அதிகரிக்கும்.
கும்பம்:


ராகு, சூரியன், புதன் நன்மை வழங்குவர். அனுமனை வழிபட சங்கடம் தீரும்.


அவிட்டம் 3, 4: முதல் இரண்டு நாட்களும் விருப்பம் நிறைவேறும். ஞாயிறு முதல் செயல்களில் வேகம் இருக்கும். வருமானத்திற்குரிய வழிகள் தெரியும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.


சதயம்: விரயச்சனியால் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். பத்தாமிட சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகி பணவரவு தாராளமாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.


பூரட்டாதி 1, 2, 3: வெள்ளி, சனியில் வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்திப்பீர்கள். ஞாயிறு முதல் முயற்சியில் லாபம் ஏற்படும். இரண்டாமிட குருவால் எண்ணம் நிறைவேறும்.
மீனம்:


சனி, சுக்கிரன், புதன் நன்மை தருவர். குரு பகவானை வழிபட சங்கடம் தீரும்.


பூரட்டாதி 4: வெள்ளி, சனியில் விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஞாயிறு முதல் குடும்பத்தினரால் நெருக்கடி தோன்றும். சிலருக்கு வீட்டை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.


உத்திரட்டாதி: எண்ணம் நிறைவேறும் வாரம் இது. புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம், புதிய வீடு கட்டுதல் என்று உங்கள் சிந்தனை செல்லும். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றக்கூடும்.


ரேவதி: உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். உறவு, நட்புகளிடம் ஏற்பட்ட பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வீர்கள். தம்பதிக்குள் கருத்து மோதல் வரலாம் என்பதால் கவனம் தேவை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X