6ம் வகுப்பில் ரம்மி விளையாட்டு பற்றிய பாடம்: நீக்க பள்ளிகல்வித் துறை முடிவு

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: பலரின் உயிரிழப்பிற்கு காரணமான ரம்மி விளையாட்டு குறித்த பாடம், 6ம் வகுப்புக்கான மூன்றாம் பருவபாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பலத்த சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து அதனை நீக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பலர் பணத்தை இழப்பதுடன், இதற்காக வாங்கிய கடனை
RUmmy, onlinerummy, subject, education, ரம்மி, ஆன்லைன் ரம்மி, பாடப்புத்தகம், பள்ளிகல்வித்துறை, நீக்கம்

சென்னை: பலரின் உயிரிழப்பிற்கு காரணமான ரம்மி விளையாட்டு குறித்த பாடம், 6ம் வகுப்புக்கான மூன்றாம் பருவபாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பலத்த சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து அதனை நீக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பலர் பணத்தை இழப்பதுடன், இதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அதனால் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.


இதை தடுக்கும் வகையில், ரம்மி விளையாட்டிற்கு நிரந்தரமாக தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றிய தமிழக அரசு அதனை கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.


latest tamil news


latest tamil news

இச்சூழ்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட 6 ம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான கணித பாடத்தில் ரம்மி விளையாடுவது பற்றிய பாடப்பகுதி இடம்பெற்றுள்ளது. பலர் உயிரிழப்பிற்கு காரணமான ரம்மி விளையாட்டு பற்றிய குறிப்புகள் குழந்தைகள் படிக்கும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை உடனடியாக நீக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.



latest tamil news

இதனை தொடர்ந்து, அந்த பாடப்பகுதியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இந்த கல்வியாண்டில் தான் இந்த பாடப்பகுதி இடம்பெற்றுள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி முழுமையாக நீக்கப்படும் என கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (49)

03-டிச-202209:42:49 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ப.கல்வித் துறை உடலுறுப்புக்களுக்கு சுறுசுறுப்பைத் தரும் விளையாட்டுக்களை அல்லவா ஊக்குவிக்க வேண்டும்
Rate this:
Cancel
Raja Sekar -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-202206:29:49 IST Report Abuse
Raja Sekar 0
Rate this:
Cancel
03-டிச-202205:56:47 IST Report Abuse
தேவதாஸ் புனே சீட்டு விளையாடுவது அன்று முதல் இன்று வரை தவறான செயல் பல குடும்பங்களை பாழ்படுத்தி உள்ளது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X