கச்சா எண்ணெயை 40 சதவீத தள்ளுபடியில் இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கி வருகிறது. அதே அளவு தள்ளுபடியை பாகிஸ்தானும் ரஷ்யாவிடம் கோரியிருந்த நிலையில், அந்த அளவு எல்லாம் உங்களுக்கு தள்ளுபடி தர முடியாது என ரஷ்யா கைவிரித்துவிட்டது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்ட பிப்ரவரியிலிருந்து கச்சா எண்ணெய் விலை உலகளவில் பீப்பாய் ஒன்றிற்கு 120 டாலர் வரை சென்றது. இந்த சமயத்தில் நாம் ஒபெக் நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை குறைத்துக்கொண்டு ரஷ்யாவிடம் இருந்து சுமார் 40% தள்ளுபடியில் எண்ணெயை பெற்றோம். இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற அளவிலேயே தொடர்ந்தது. இல்லையெனில் இன்னும் அதிகரித்து விலைவாசி தாறுமாறாக உயர்ந்திருக்கும். ரஷ்யாவுடன் நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த நட்புறவு இதற்கு உதவியது.
![]()
|
இந்நிலையில் பாகிஸ்தானும் தங்களுக்கு இந்தியாவுக்கு தருவது போல் 40% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் வழங்கும் படி கேட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இதில் பாக்., பெட்ரோலியத் துறை அமைச்சர் முசாதிக் மாலிக் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் தற்போதுள்ள சரக்குகள் அனைத்தும் பெரிய நாடுகளுக்கு (இந்தியா, சீனா) உறுதி செய்யப்பட்டுவிட்டதால், இப்போதைக்கு எதையும் வழங்க முடியாது என்று ரஷ்யா கூறிவிட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளது.