காங்கேயம்: காங்கேயம் அருகே மளிகை கடையில் புகுந்த முகமூடி திருடர்கள் பணம் இல்லாததால் தின்பண்டங்களை எடுத்த சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம் சென்னிமலைரோடு ஆலம்பாடி பஸ்நிறுத்தம் பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த மனோகரன்(50) என்பவர் பல ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவரது கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் மளிகை கடையின் மேற்கூறிய பிரித்து உள்ளே சென்றனர்.
அங்கு பணம் வைக்கப்பட்ட ட்ராயர் உள்ளிட்ட பகுதிகளை தேடினர். ஆனால் பணம் ஏதும் இல்லாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மளிகை கடையில் உள்ள தின்பண்டங்களை எடுத்துச் சென்றனர். இச்சம்பம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவில் பதிவாகி, தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.